நிர்பயா வழக்கு : குற்றவாளி தாக்கல் செய்த மனு மீது டிசம்பர் 17 -ல் விசாரணை

Published by
Venu
  • நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்ஷ்குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்  செய்தார்.
  • அக்ஷ்குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது  டிசம்பர் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா இரவு நேரத்தில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த நிகழ்வு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.பேருந்து ஓட்டுநர் ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் (பேருந்து உதவியாளர்) ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில்  சிறுவன் கைது செய்யப்பட்ட  சீர்திருத்த பள்ளியில் இருந்த நிலையில் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான்.மீதமுள்ளவர்களில் சிறையில் அடைக்கப்பட்ட ராம்சிங் தற்கொலை செய்து கொண்டார்.பின்னர் இந்த வழக்கில் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இந்த தண்டனை எதிர்த்து நான்கு பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.ஆனால் அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.எனவே நான்குபேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றனர்.இந்த வழக்கில் நால்வருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.ஆனால், தற்போது வரை அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

 

இதற்கு இடையில் இந்த வழக்கில்  தொடர்புடைய குற்றவாளி அக்‌ஷய் குமார்சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.இந்த நிலையில்  குற்றவாளி அக்‌ஷய் குமார்சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது  விசாரணை டிசம்பர் 17- ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கினை விசாரிக்கிறது.

Recent Posts

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

1 hour ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

3 hours ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

3 hours ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

4 hours ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

4 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

4 hours ago