நிர்பயா வழக்கு : குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு? இன்று நீதிமன்றம் தீர்ப்பு
நிர்பயா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் சார்பாக 4 பேருக்கும் தனித்தனியாக தூக்குத்தண்டனை தேதியை அறிவிக்க வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.
டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே நிர்பயா குற்றவாளிகளை பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கிலிடத் தடைக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் (AP Singh) புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை நேற்று நிறைவேற்றப்பட இருந்த நிலையில் இரண்டாவது முறையாக தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.மேலும் மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்டது டெல்லி நீதிமன்றம்.
பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் சார்பாக 4 பேருக்கும் தனித்தனியாக தூக்குத்தண்டனை தேதியை அறிவிக்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கின் விசாரணை டைபெற்ற நிலையில் வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.தற்போது இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.