நிர்பயா வழக்கு : குற்றவாளி தொடர்ந்த மனு இன்று விசாரணை

Published by
Venu
  • தண்டனையை நிறுத்தி வைக்கக்  குற்றவாளி பவன் குப்தா மனுவை தள்ளுபடி  செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்.
  • உச்ச நீதிமன்றத்தில் பவன் குப்தா  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பவன் குப்தா டெல்லி உயர்நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்தார்.அவரது மனுவில், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சம்பவம் நடந்த போது தான் சிறுவன் என்றும் எனவே சிறார் சட்டத்தின் பலனை தனக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது.அப்பொழுது,பவன் குப்தா மனுவை தள்ளுபடி செய்வதாக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது. பவன்  வழக்கறிஞர் ஏ.பி.சிங்குக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பவன் குப்தா  மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.  மேல்முறையீட்டு மனுவை இன்று  உச்ச நீதிமன்றம்  விசாரணை நடத்துகிறது.

Published by
Venu

Recent Posts

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

20 minutes ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

43 minutes ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

55 minutes ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

58 minutes ago

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

1 hour ago

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

2 hours ago