கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் தொடர்ந்த மனுவால் மூன்று முறை தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
இதையெடுத்து நான்காவது முறையாக தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி நாளை மறுநாள் தூக்கிலிடப்பட வேண்டும். இதற்காக திகார் சிறை நிர்வாகம் முன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டைச் சேர்ந்த பவன் ஜல்லத் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நேற்று டெல்லி திகார் சிறைக்கு வந்தார்.
இந்நிலையில் இன்று தூக்கில் போடுவது குறித்த ஒத்திகையை நடைபெறுகிறது. நாளை மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…