4 பேருக்கும் தூக்கு உறுதி ! நிர்பயா குற்றவாளி கருணை மனு நிராகரிப்பு
நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் .
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை செய்திருந்தார்.குற்றவாளி பவன் குமாரின் சீராய்வு மனு மீது இன்று (மார்ச் 2-ஆம் தேதி )விசாரணை நடத்தியது உச்சநீதிமன்றம்.
அப்பொழுது ,பவன் மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் குற்றவாளி பவன் குமார் கருனை மனு தாக்கல் செய்துள்ளார். பவன் குமாரின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கருணை மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் பவன் குப்தாவின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.எனவே குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை தூக்குலிட வாய்ப்பு உள்ளது.