நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற புதிய தேதி வேண்டும்-புதிய மனு தாக்கல்

Published by
Venu

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு  தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு புதிய தேதியை அறிவிக்கக்கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த  2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி  22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு இடையில்  குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை  முகேஷ் சிங் அனுப்பினார்.ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார் . இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இதன் பின்னர்  தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.

குற்றவாளிகள் வினய் ஷர்மா, முகேஷ் சிங் மற்றும் அக்சய் குமார் சிங் தாகூர்  ஆகியோர்   தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்கள்.ஆனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணை மனுக்களை நிராகரித்தார்.

இந்நிலையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை நிறைவேற்ற கோரி திகார் சிறை நிர்வாகத்தின் சார்பில்  டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் அந்த மனுவில் ,4 பேரில் 3 குற்றவாளிகளின் கருணைமனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் ,புதிய தேதியை அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Published by
Venu

Recent Posts

“திமுக – பாஜக., கள்ள உறவு இல்ல, அது நல்ல உறவு கூட்டணி தான்.!” சீமான் பளீச்!  

“திமுக – பாஜக., கள்ள உறவு இல்ல, அது நல்ல உறவு கூட்டணி தான்.!” சீமான் பளீச்!

திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…

9 mins ago

இன்றும், நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – சென்னை வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல் – பணத்தை பதுக்க நினைக்கும் மனோஜ் ரோகிணி ..!

சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…

1 hour ago

அஸ்வினின் மாதிரி ஐபிஎல் ஏலம்! நடராஜனை ரூ.10 கோடிக்கு எடுத்த சிஎஸ்கே!!

சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…

1 hour ago

ஆம் ஆத்மியில் இருந்து பதவி விலகி ஒரே நாளில் பாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…

2 hours ago

மக்களே வாரங்களா..? இல்லை வர வைக்கிறீகளா? – திமுகவை விமர்சித்த சீமான்!

திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…

2 hours ago