நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு புதிய தேதியை அறிவிக்கக்கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.பின்பு இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இதன் பின்னர் தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.
குற்றவாளிகள் வினய் ஷர்மா, முகேஷ் சிங் மற்றும் அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோர் தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்கள்.ஆனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணை மனுக்களை நிராகரித்தார்.இந்நிலையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை நிறைவேற்ற கோரி திகார் சிறை நிர்வாகத்தின் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் புதிய மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.மேலும் அந்த மனுவில் ,4 பேரில் 3 குற்றவாளிகளின் கருணைமனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் ,புதிய தேதியை அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இன்று அந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…