நிர்பயா வழக்கு: தூக்கிலிருந்து தப்பிக்கும் கடைசி முயற்சி -குற்றவாளிகள் மனு தாக்கல்
- நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
- குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
அதில் ஒருவர் சிறுவன் என்பதால் அந்த சிறுவனை சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.மீதியுள்ள 5 பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்றம் அறிவித்தது
இந்நிலையில் குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுக்கள், வரும் 14-ம் தேதி 5 நீதிபதிகள் அமர்வால் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.