#BREAKING :நிர்பயா வழக்கு ..! குற்றவாளி 4 பேருக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு

Default Image
  • நிர்பயா வழக்கில் தொடர்புடைய  குற்றவாளிகளுக்கு நீண்ட நாட்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.
  • குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கிலிட நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில்  4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் நிலையில் ,தண்டனையை நிறைவேற்றக்கோரி நிர்பயா பெற்றோர்களின் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீது நடைபெற்ற விசாரணையில் , குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு இடையில்  குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  மனு  தாக்கல் செய்தனர்.இந்த மனு விசாரிக்கப்பட்டது. ஆனால் அவர்களது  சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.எனவே அவர்களை  தூக்கிலிடப்படுவது உறுதியாகியது. மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை  முகேஷ் சிங் அனுப்பினார்.ஆனால்  முகேஷ் சிங்கின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்தார்.மேலும் கருணை மனுவை  உள்துறை அமைச்சகமும் நிராகரித்தது. தற்போது நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டதால் ,தூக்குத்தண்டனை உறுதியாகியது.

இதனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த ஆவணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் புதிய  உத்தரவு பிறப்பித்ததுள்ளது.அதில், குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கிலிட நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

IPL 2025 KKR vs srh
KKR vs SRH - IPL 2025 1st innings
Opposition leader Rahul Gandhi
CM MK Stalin speech CPIM Conference
TVK Leader Vijay
Watermelon - sathish kumar