டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் பின்னர் குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்றம் அறிவித்தது.
எனவே குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.அவர்களது சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை முகேஷ் சிங் அனுப்பினார்.ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்தார்.மேலும் கருணை மனுவை உள்துறை அமைச்சகமும் நிராகரித்தது.குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.இதற்கு இடையில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முகேஷ் சிங் மனு தாக்கல் செய்தார்.அவரது மனுவில் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.முகேஷ் சிங் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே ஒப்புதல் அளித்தார். வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக பதிவாளரிடம் முறையிடவும் அறிவுறுத்தினார்.இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில்,முகேஷ் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்த நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்ததாக குறிப்பிட்டார்.அப்பொழுது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில்,குற்றவாளிகளுக்கு கருணை காட்டக்கூடாது என்று தெரிவித்தார்.இரு தரப்பு வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம்,முகேஷ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…