கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா இரவு நேரத்தில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த நிகழ்வு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.பேருந்து ஓட்டுநர் ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் (பேருந்து உதவியாளர்) ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் சிறுவன் கைது செய்யப்பட்ட சீர்திருத்த பள்ளியில் இருந்த நிலையில் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான்.மீதமுள்ளவர்களில் சிறையில் அடைக்கப்பட்ட ராம்சிங் தற்கொலை செய்து கொண்டார்.பின்னர் இந்த வழக்கில் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இந்த தண்டனை எதிர்த்து நான்கு பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.ஆனால் அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.எனவே நான்குபேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றனர்.இந்த வழக்கில் நால்வருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.ஆனால், தற்போது வரை அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இதற்கு இடையில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அக்ஷய் குமார்சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அக்ஷய் குமார்சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது விசாரணை டிசம்பர் 17- ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதனை தொடர்ந்து இன்று விசாரணைக்கு வருகிறது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கினை விசாரிக்கிறது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…