நிர்பயா வழக்கு : குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி

Published by
Venu

டெல்லியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா  தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். 

கடந்த  2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி  22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு இடையில் குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  மனு  தாக்கல் செய்தனர்.அவர்களது  சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை  முகேஷ் சிங் அனுப்பினார்.ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார் . இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முகேஷ் சிங் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணையில்,முகேஷ் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இதனால் மனு தள்ளுபடியானதால் முகேஷ் சிங் தூக்கிலிடப்படுவது உறுதியாகியது.இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா  தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

Recent Posts

KKR vs SRH : மிரட்டல் பந்துவீச்சு., கொல்கத்தா அபார வெற்றி! SRH ‘ஆல் அவுட்’ படுதோல்வி! 

KKR vs SRH : மிரட்டல் பந்துவீச்சு., கொல்கத்தா அபார வெற்றி! SRH ‘ஆல் அவுட்’ படுதோல்வி!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

3 hours ago

சடசடவென சரிந்த SRH-ன் ‘டைனோசர்’ கூட்டணி! வெற்றி களிப்பில் கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…

4 hours ago

KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…

5 hours ago

அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…

5 hours ago

“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!

மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…

6 hours ago

வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

6 hours ago