டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றச் சம்பவம் நடைபெற்று 7 வருடங்கள் கழிந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
20 நிமிடங்கள் அவர்களின் உடல் தூக்கிலிட்ட நிலையிலேயே இருக்கும் என்று சிறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை தொடர்ந்து சிறைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங்கின் மனைவி மற்றும் அவருகளது 6 வயது மகன் சிறைக்கு வெளியே இருந்தனர்.
இன்று அதிகாலை முதலே பதற்றமாக இருந்த அக்ஷயின் மனைவி புனிதா தேவி நேரம் ஆக ஆக அழத் தொடங்கினார். இந்நிலையில் அழுது கொண்டே”என் கணவர் சாகப்போகிறார். என்னையும் கொன்றுவிடுங்கள். நான் ஏன்? வாழவேண்டும்.என் கணவர் அப்பாவி, நான் ஒரு விதவையாக என் வாழ்க்கையை தொடர விரும்பவில்லை. கணவர் இறந்துவிட்டால் மனைவியின் நிலை என்ன?? என்பது இந்த அரசுக்கு தெரியாதா?” என்றவாறு அழுது கொண்டே ஆவேசமாக கூறினார்.
இதற்கிடையில் 5.30மணிக்கு சிறைக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி அறிந்த உடன் அவர் தனது செருப்பைக்கொண்டு தன்னைத்தானே அடித்து கொண்டு மயங்கி விழுந்தார்.அங்கிருந்தவர்கள் உடனே அவருக்கு தண்ணீர் கொடுத்தனர்.இச்சம்பவம் சிறைக்கு வெளியே பரபரப்பை ஏற்படுத்தியது. 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அக்ஷய் தான் போலீசாரின் குற்றச்சாட்டின்படி முக்கிய குற்றவாளியாவார். ஆனால் அவரின் குடும்பத்தினர், அக்ஷய் இக்குற்றத்தை செய்திருப்பார் என நம்ப முடியாது என்று தொடர்ந்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…