டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றச் சம்பவம் நடைபெற்று 7 வருடங்கள் கழிந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது
இத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தூக்கு மேடைக்கு செல்லும் சில நிமிடத்திற்கு முன்பு வரை கூட சட்ட போராட்டங்களை குற்றவாளிகள் மேற்கொண்டனர். குற்றவாளிகளுள் ஒருவரான பவன் குப்தா சார்பில் இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று நள்ளிரவே மேல்முறையீடு செய்யப்பட்டது.
நாடே மார்ச்.,20 ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு என்ற எண்ணத்தில் இருந்த நிலையில் திடீரென குற்றவாளிகள் இரவில் தொடர்ந்த இம்மனு மீதான விசாரணை இன்று அதிகாலை 2.45 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “ஏபி சிங் “ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். ஆனால் வாதாடிய ஏபி சிங் இதற்கு முன் வைத்த அதே வாதங்களையே உச்ச நீதிமன்றத்தில் வைத்தார்.மேலும் டெல்லி உயர்நீதிமன்றம் , பாட்டியாலா நீதிமன்றத்தில் வைத்த அதே வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ளார். திரும்ப திரும்ப இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள் ,”ஏபி சிங் புதிய வாதங்களை வையுங்கள். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதீர்கள்” என்று ஆவேசமாக கூறினார்கள். இதையடுத்து வழக்கறிஞர் ஏபி சிங் பல வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறி, அதிகாலை நிறைவேற்றப்பட உள்ள இந்த தூக்கு தண்டனையை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என கூறினார்.ஏபி சிங்-கின் இந்த வாதத்தினை எதையும் நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றவாளிகள் 4 பேருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது. மேலும் வழக்கு மிகச்சரியாக நடந்து இருக்கிறது. முறையான பாதையில் வழக்கு சென்று உள்ளது. கருணை மனு அளிக்க 4 வருடங்கள் வரை நேரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு எதிரான தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.நீதிபதிகளின் இந்த தீர்ப்பினை கேட்டு அதிர்ச்சி அடைந்த குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏபி சிங், குற்றவாளிகள் 4 பேரையும் அவர்களின் குடும்பத்தாரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன் அவர்களின் குடும்பத்தாரை சந்திக்க அனுமதி கொடுக்க வேண்டும். அவர்களின் கடைசி ஆசையாக இதை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.வாதத்தினை உன்னிப்பாக கவனித்த நீதிபதிகள் இதை நீங்கள் மத்திய அரசு வழக்கறிஞரிடம் தானே கேட்க வேண்டும்.இது தொடர்பாக எங்களிடம் நீங்கள் கேட்க கூடாது என்று நீதிபதிகள் கூறிய நிலையில் இது தொடர்பாக வாதத்தினை தொடர்ந்த மத்திய அரசின் வழக்கறிஞர் “சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா” இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குற்றவாளிகள் அவர்களின் குடும்பத்தாரை சந்திக்க அனுமதிக்க முடியாது. காரணம் இது திகார் சிறை விதிகளுக்கு எதிரானது என்று கூறி கடைசி ஆசை என குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங்-கின் வாதம் எடுபடவில்லை.இந்நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞரின் கூறிய கேட்டு ஏபி சிங் அதிர்ச்சி அடைந்தார்.இந்நிலையில் எல்லா சட்டப்போராட்டங்களும் முடித்து வைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டது.20 நிமிடங்கள் தூக்கில் தொங்கியபடியே இருப்பார்கள் என்று சிறைத்துறை தகவல் தெரிவித்தது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…