ஏவிய பிறகு 8 நிமிடங்கள் கழித்து நிறுத்தப்பட்ட நிர்பே ஏவுகணை.!
33 நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த நிர்பே ஏவுகணை வங்காள விரிகுடாவில் ஏவப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று ஒடிசாவின் சோதனை நிலையத்திலிருந்து 800 கி.மீ தூரம் நிர்பே கப்பல் ஏவுகணையை வங்காள விரிகுடாவில் ஏவியது. ஆனால், சில நிமிடங்கள் கழித்து சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்த முடிவு செய்தது.
இந்த ஏவுகணை காலை 10.30 மணிக்கு சோதனை நிலையத்திலிருந்து ஏவப்பட்டது என்று ஒரு அதிகாரி செய்தி நிறுவனமான இந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தார். மேலும், ஏவுகணையின் சோதனை 8 நிமிடங்கள் கழித்து நின்றுவிட்டது என்று கூறினார்.
நிர்பே ஏவுகணை இந்தியாவின் முதல் உள்நாட்டு உருவாக்கிய கப்பல் ஏவுகணை ஆகும். நிர்பே சப்ஸோனிக் குரூஸ் ஏவுகணை 0.7 மாக் வேகத்தில் பயணிக்கிறது.
இதற்கிடையில், மார்ச் 12, 2013 அன்று நடைபெற்ற நிர்பேயின் முதல் சோதனை விமானம் செயலிழப்பு காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக நடுப்பகுதியில் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. இருப்பினும், 2014ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெற்றிகரமாக ஏவியது குறிப்பிடத்தக்கது.