குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வினய் சர்மாவின் மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரரிக்கிறது.
நாட்டையே அதிர்ச்சியாக்கிய டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா குடியரசுத் தலைவர்க்கு கருணை மனு ஒன்றை அனுப்பினான்.ஆனால் இம்மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் நிராகரித்தார்.
இந்நிலையில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வினய் மனு தாக்கல் செய்திருந்தான்.ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்ட தூக்குத்தண்டனைக்கான தேதிகள் மாற்றப்பட்டு வருவதற்கு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை அளித்து வருவதே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் விமர்சிகின்றனர். இந்நிலையில் இத்தையக அடுத்தடுத்து தாக்கல் செய்யபட்ட மனுக்களினால் ஒத்தி வைக்கப்பட்ட குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கு புதிய தேதியை நிர்ணயிப்பதில் சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷாதேவி நிலவரத்தை கண்டு நீதிமன்ற வளாகத்திலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதார்.நிர்பயாவிற்கு நீதி கிடைக்க தாமதமாவதை அறிந்து வேதனை அடைந்துள்ளார்.மேலும் நாட்டு மக்களும் இந்த வழக்கின் விசாரணைகளை எல்லாம் அவைகள் செல்லும் திசைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…