உள்துறை அமைச்சருக்கு ரத்தததில் கடிதம் அனுப்பிய துப்பாக்கி சூடுதல் விராங்கனை..!ரத்தத்தில் கடிதம் எழுத இந்த கொடூரம் தான் காரணம்..!

Default Image
  • உள்துறை அமைச்சருக்கு ரத்தத்தில் சர்வதேச துப்பாக்கி சூடுதல் விராங்கினை கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.
  • சர்வதேச துப்பாக்கி சூடுதல் விராங்கினை  ரத்தத்தில் கடிதம் எழுத நிர்பயா கொடூரம் தான் காரணம் இதற்கு பொதுமக்களும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.இது குறித்த செய்தி தொகுப்பினை பற்றி தெரிந்து கொள்வோம்.

கடந்த 2012 ஆம் ஆண்டு நாட்டையே வெட்கி தலைகுணிய வைத்த கொடூர சம்பவமாக கருதப்படும் டெல்லி மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா  ஓடும் பேருந்தில் வைத்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார் காம கொடூரர்களால்.பின்னர் அரை உயிராக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த போதே உயிரிழந்தார் என்றால் எத்தணை கொடூரமான வலிகளை அனுபவித்து இருப்பார்.

சற்றும் நெஞ்சில் அறம் இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்வை அழித்தது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். யார் அந்த காமக்கொடூரர்கள் என்றால் அது ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் அதில் ஒரு சிறுவன் இவர்கள் அனைவரும்  கைது செய்யப்பட்டனர்.

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சீர்திருத்த பள்ளியில்  இருந்து வந்த நிலையில் 3 ஆண்டுகள்  கழித்து அவன் விடுதலை செய்யப்பட்டான்.இது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.நீதி கிடைக்கவில்லை என்று நிர்பயாவின் தாய் கண்ணீர் விட்டு கதறி அழுதார். 6 பேரில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.மீதமுள்ளவர்களில் சிறையில் அடைக்கப்பட்ட ராம்சிங்  என்பவரோ தற்கொலை செய்து கொண்டார்

 

Image

.

அதன் பின்  இந்த வழக்கில் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.ஆனால் தற்போது வரை அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இதற்கிடையில் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறைவேற்றக்கோரி நிர்பயாவின் பெற்றோர்களின் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

nirbhaya case

ஒரு வழக்கு நாட்டையே உலுக்கியது.அந்த வழக்கிற்கு தீர்ப்பும் கொடுக்கப்பட்டு விட்டது.தற்போது பாதிக்கப்பட்டு தன் மகளை இழந்தவர்கள் தீர்ப்பினை நிறைவேற்றுங்கள் என்று மீண்டும் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

இந்த வழக்கு மீது டிச.13  நடைபெற்ற விசாரணையில் ,குற்றவாளிகளில் ஒருவர் தாக்கல் செய்த சீராய்வு மனு வருகின்ற 17 -ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது.எனவே இந்த விசாரணை முடியும் வரை தண்டனையை நிறைவேற்றாமல் காத்திருக்க வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.இதனையடுத்து நீதிபதி சதீஸ் குமார் வருகின்ற 18ந் தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.

Image

இதனிடையே நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள மத்திய அமைச்சகம் அனுமதிக்க கோரி சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு  ரத்தத்தில் கடிதம் எழுதி அவருக்கு அனுப்பி உள்ளார்.இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் பலரும் வர்த்திகாவிற்கு தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live dharmendra pradhan
Minister Palanivel Thiyagarajan - BJP State president Annamalai
DMK MPs iniviting various state CMs
Jio - Starlink
hardik pandya virat kohli and rohit sharma
Malavika Mohanan sad
dharmendra pradhan Anbil Mahesh Poyyamozhi