இந்த கொடூர குற்றவாளிகள் தனித்தனியாக கருணை மனு, சீராய்வு மனு தாக்கல் செய்து வருவதை தொடர்ந்து, இவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. கடந்த 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், குற்றவாளிகளை டில்லி பாட்டியாலா செசன்சு நீதிமன்றம் தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய,மாநில அரசுகள் சார்பிலும் டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சுரேஷ் கயித், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் நிர்பயாவின் பெற்றோர் டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘குற்றவாளிகளுக்கான துாக்கு தண்டனையை நிறைவேற்ற, செசன்ஸ் நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என, வலியுறுத்தியுள்ளனர்.மத்திய அரசு மனு மீது, டில்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…