நிர்பயா குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் டெல்லி ஆளுநர்..உள்துறைக்கு அனுப்பிவைப்பு!
- நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிப்பு
- கருணை மனுவை நிராகரித்த டெல்லி ஆளுநர் அனில் பைஜால் உள்துறைக்கு அனுப்பி வைத்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான்.அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.இந்த மனு ஜனவரி 14-ம் தேதி விசாரிக்கப் பட்டது. ஆனால் அவர்களது சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.எனவே அவர்களை தூக்கிலிடப்படுவது உறுதியாகிய அடுத்து அடுத்த நடவடிக்கையில் களமிரங்கிய குற்றவாளிகள் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி உள்ளார்.
அந்த கருணை மனுவையும் குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டால், தான் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை மீண்டும் உறுதியாக கூடும்.இந்நிலையில் தண்டனை நிறைவேற்ற சில தினங்களே உள்ள நிலையில் கருணை மனு நிலுவையில் இருப்பதால் நீதிமன்றம் குறிப்பிடப்பட்ட ஜனவரி 22-ம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது என்று டெல்லி அரசு வட்டாரங்களில் தகவல் கசிந்தது.மேலும் முகேஷ் சிங் தன் கருணை மனுவை காரணம் காட்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தண்டனையை தடைக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தான் அதன் மீதான விசாரணையில் நடந்தவைகள்:
கருணை மனு அளிக்கப்பட்டுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தான்.இந்த மனு விசாரணைக்கு வந்த போது,திகார் சிறை நிர்வாகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்கு பிறகு தான் தூக்கிலிட முடியும் என்று தெரிவித்தார். ஆகையால் வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று கூறினார்.வாதங்களை கேட்ட நீதிபதிகள், அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தூக்கு தண்டனைக்கான வாரண்டில் எந்தஒரு பிழையும் இல்லை என்று தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்த மனுவானது விசாரணையை இழுத்தடிப்பதற்கான உத்தியாகவே எங்களுக்கு தெரிவதாக தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்வதன் மூலமாக ஒரு நீதிமன்றத்தை மற்றொரு நீதிமன்றத்துக்கு எதிராக நிறுத்தி விளையாட முயற்சிப்பதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளை சாடினர். இறுதியாக நீதிபதிகள் நீதிமன்றத்தால் அளிக்கப் பட்ட நிர்பயா குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசான டெல்லி அரசு பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்திருந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேரில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்து உள்ளார்.மேலும் கருணை மனுவை நிராகரித்த ஆளுநர் அதனை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.உள்துறை தூரித நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் வரும் 22 தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதியாகும்