நீரவ் மோடியின் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
நீரவ் மோடியின் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்ய மும்பை நீதிமன்றம் அனுமதி.
வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு இந்தியாவிலிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மும்பை சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் தொழிலதிபர் நீரவ் மோடி பொருளாதார குற்றவாளியாக அறிவித்து, அவரது 39 சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட அமலாக்கத்துறையினருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த 39 சொத்துக்களின் ரூ.500 கோடி என கூறப்படுகிறது. ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அடகு வைத்த 9 சொத்துக்களை அவர்களால் பறிமுதல் செய்ய முடியாது என கூறப்படுகிறது.