#முடக்கம்# 329.66 கோடி சொத்து..! கோட் அமலாக்கத்துறைக்கு குட்டு
நிரவ் மோடிக்கு சொந்தமான, 329.66 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆகியோர், 14 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தது தொடர்பாக, சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது.
வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற நீரவ் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.இந்நிலையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை, சி.பி.ஐ தற்போது மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது, அமலாக்கத் துறையும் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதில், நிரவ் மோடிக்கு சொந்தமான, 329.66 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க தனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.