நிபா வைரஸ் தாக்கத்தால் தேசிய நோய் தடுப்பு மையத்தின் குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.
கொரோனா வைரஸ் தாக்கம் பல்வேறு மாநிலங்களை பெருமளவு பாதித்து வருகிறது. இருந்தபோதிலும் கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் உள்ளது. அதன் காரணத்தால் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகமான அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் ஒரு சிறுவன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இன்று காலை 5 மணியளவில் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளான். நான்கு நாட்களுக்கு முன்பு இந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தான். சனிக்கிழமை இவனது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும், இவனது மாதிரிகள் புனே தேசிய கிருமியியல் மையத்திற்கு நேற்று முன் தினம் அனுப்பப்பட்டது.
இதில் இவனுக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த வைரஸ் தொற்றை கண்காணிக்கும்படி பல்வேறு தடுப்பு குழுக்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவனுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால், சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களுக்கு எந்த அறிகுறியும் ஏற்படவில்லை.
சிறுவனின் ரத்தம், எச்சில், மூளை தண்டுவட திரவம் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் தொற்று இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கவலைப்பட வேண்டாம். மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று வரவுள்ள மத்திய குழு கேரளாவிற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை செய்யவுள்ளது. கேரளாவில் உள்ள கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…