ஒரே நாளில் ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.! கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

Vande Bharat Express

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், செப்டம்பர் 24ம் தேதி, அதாவது நாளை மதியம் 12:30 மணிக்கு, ஒன்பது வந்தே பாரத் ரயில்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்தவும், ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்கவும் பெரிதளவில் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த ரயில்கள் உதய்பூர்-ஜெய்ப்பூர், திருநெல்வேலி-மதுரை-சென்னை, ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை (ரேணிகுண்டா வழியாக), பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி, ராஞ்சி-ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய வழித்தடங்கள் இடையே இயக்கப்படும். நாட்டில் இதுவரை 25 வழி தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில்களால் நாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 34 ஆக உயரும். இந்த ஒன்பது ரயில்கள் ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய பதினொரு மாநிலங்களில் இணைப்பை அதிகரிக்கும். இந்த வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கத்தின் வழித்தடங்களில் அதிவேக ரயிலாக இருக்கும் மற்றும் பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களின் இணைப்பை மேம்படுத்த ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் திருநெல்வேலி-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை முக்கிய மத நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கும். மேலும், விஜயவாடா – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில், ரேணிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்பட்டு, திருப்பதி யாத்திரை மையத்திற்கு இணைப்பை வழங்கும்.

இந்த வந்தே பாரத் ரயில்களின் அறிமுகம் நாட்டில் புதிய தரமான ரயில் சேவையை அறிவிக்கும். கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இந்த ரயில்கள், சாதாரண மக்கள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள், மாணவர் சமூகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நவீன, விரைவான மற்றும் வசதியான பயணத்தை வழங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்