புனேவில் கார் – லாரி மோதி கொண்டதில் 9 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து சோலாப்பூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 9 இளைஞர்கள் கடாம்வாக் வஸ்தி என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியது. அதில் காரில் வந்த 9 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் ,உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் ,காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் முதற்கட்டமாக வேகமாக காரை ஓட்டி சென்றது தான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக சுமார் 2 மணி நேரமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…