“ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை ” திட்டத்தை நிறைவு செய்த 9 மாநிலங்கள்

ஆந்திரா, கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நிறைவு செய்துள்ளன.
மக்கள் தங்களது பகுதியில் செயல்படும் நியாய விலைக்கடைகளில் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டம் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு மூலம் எந்த நியாய விலை கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
இதனிடையே நீண்டகால கடன் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் எதிர்காலத்தில் எந்தவிதமான பாதகமான தாக்கத்தையும் தடுப்பதற்கும், கூடுதல் கடன் வாங்கலின் ஒரு பகுதி குடிமக்களுக்கு சேவை வழங்குவதில் முக்கியமான துறைகளில் சீர்திருத்தங்களைச் செய்யும் மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தங்களுக்காக அடையாளம் காணப்பட்ட துறைகளில் ஒன்று பொது விநியோக முறை ஆகும் . ஜி.எஸ்.டி.பி யின் 2 சதவீத கூடுதல் கடன் வரம்பில், 0.25 சதவீதம் ” ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை ” திட்டத்தை செயல்படுத்த இணைக்கப்பட்டுள்ளது.ஒன்பது மாநிலங்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நிறைவு செய்துள்ளன.ஆந்திரா, கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஆகும்.அதைத் தொடர்ந்து இந்த மாநிலங்கள் கூடுதலாக 23,523 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு அனுமதித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025