துணி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலி!திடுக்கிடும் தகவல்!

- டெல்லியில் துணி குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 9 பேர் தீயில் கருகி பலியாகியுள்ளனர்.
- தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள கிராரி பகுதியில் துணிகள் வைத்திருக்கும் குடோன் உள்ளது.இந்த குடோனில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 9 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த குடோன் குடியிருப்பு பகுதியோடு இணைந்தது என்பதால் இந்த விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் பனி மூட்டமாக காணப்பட்டுள்ளது.மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர்.மேலும் அங்கு தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.எனினும் எவ்வாறு தீ விபத்து ஏற்பற்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.