#Curfew:கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு வாபஸ்
கர்நாடகாவில் இன்று முதல் நடைமுறைக்கு வரவிருந்த இரவு ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று முதல் நடைமுறைக்கு வரவிருந்த இரவு ஊரடங்கு உத்தரவை மாநிலத்தில் அமல்படுத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அதை வாபஸ் பெற்றுள்ளது அம்மாநில அரசு. இரவு ஊரடங்கு உத்தரவு இன்று இரவு முதல் ஜனவரி 1 வரை காலை 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விதிக்க திட்டமிடப்பட்டது. “பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டது.அதன் பின்பு மூத்த அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு , இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.