கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இமாச்சல பிரதேச அரசு நேற்று மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை ஜனவரி 5 வரை நீட்டிக்க முடிவு செய்தது. இந்த நடவடிக்கை மாநில அமைச்சரவையால் மறுஆய்வுக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட மாவட்டங்களில் சிம்லா, குலு, மண்டி மற்றும் காங்க்ரா ஆகியவை அடங்கும். கடந்த மாதம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்ததால் நவம்பர் 23 அன்று இந்த மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என டிசம்பர் 15 வரை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 4 வரையிலான வகுப்புகள் மற்றும் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாஸ் என அரசு தெரிவித்தது. இருப்பினும், 5, 8, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும். மேலும், 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வு பாடத்திட்டத்தில் 30 சதவீத குறைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அரசியல் பேரணிகள், பொது குறை தீர்க்கும் கூட்டங்கள் போன்றவற்றிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியில் ஒன்றுகூட அனுமதி கொடுக்கவில்லை.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…