இன்று முதல் குஜராத்தின் 3 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு.!
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தை தொடர்ந்து சூரத் , ராஜ்கோட்,வடோதராவில் இன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது .
கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் புதிதாக 1,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,94,402-ஆக உயர்ந்துள்ளது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த வியாழக்கிழமை, அகமதாபாத்தில் இன்று இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து குஜராத் அரசாங்கம் உத்தரவிட்டது .
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக 1,420 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் சூரத் , ராஜ்கோட்,வடோதராவில் இன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று துணை முதல்வர் நிதின்படேல் தெரிவித்துள்ளார் .மேலும் குஜராத் மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட இருந்த நிலையில் ,தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.