நாளையிலிருந்து இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், அனைத்து மாநில அரசுகளுக்கும் இரவு நேர ஊரடங்கு, பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு நாளை (டிசம்பர் 27) முதல் இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம் மற்றும் கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…