இன்று முதல் 10 நாட்களுக்கு…50% மட்டுமே அனுமதி – அரசு அவசர அறிவிப்பு!

Default Image

கர்நாடகா:இன்று முதல் 10 நாட்களுக்கு இரவு நேர(இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதாக கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளதாகவும்,ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 151 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தகவல் தெரிவித்தது.

ஏற்கனவே,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது.மேலும்,இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில்,கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,அதில் 15 பேர் குணமடைந்து விட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.மேலும்,அச்சுறுத்தும் ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று (டிச.28 ஆம் தேதி) முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதாக கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி,இன்று முதல் 10 நாட்களுக்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,திரையரங்குகள்,உணவகங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.திருமண நிகழ்ச்சிகளில் 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே,மத்தியப் பிரதேசம்,உத்திரப்பிரதேசம்,அசாம்,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவிலும் டிச.30 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்