தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப் படுத்தும் வண்ணம் கடந்த 20ஆம் தேதி முதல் தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இதனையடுத்து, மேலும் 7 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே 8ஆம் தேதி வரை தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு 4,35,606 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,261 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ட்ரோன்களை பயன்படுத்தி தடுப்பூசிகளை வழங்குவதற்கான அனுமதியை தெலுங்கானா அரசுக்கு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த அனுமதி ஒரு வருட காலத்திற்கு செல்லுபடி ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…