தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு…! ட்ரான்களை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி வழங்க அனுமதி….!

Default Image

தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப் படுத்தும் வண்ணம் கடந்த 20ஆம் தேதி முதல் தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இதனையடுத்து, மேலும் 7 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே 8ஆம் தேதி வரை தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு 4,35,606 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,261 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ட்ரோன்களை பயன்படுத்தி  தடுப்பூசிகளை வழங்குவதற்கான அனுமதியை தெலுங்கானா அரசுக்கு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த அனுமதி ஒரு வருட காலத்திற்கு செல்லுபடி ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்