மீண்டும் நாளை முதல் ஜன.5 வரை இரவு நேர ஊரடங்கு அமல்.!
மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும்போது மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருந்தது. அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனிடையே, இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்திய அரசு விமான சேவையை ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு விழா வருவதையொட்டி, கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிராவில் நாளை முதல் ஜன.5 வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 15 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர் என்றும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.