புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மருமகன் முகமது உமர் பருக்கிற்கு தாக்குதலை நடத்துவதற்கு 10 லட்சம் ரூபாயானது பாகிஸ்தானில் உள்ள வங்கி கணக்குகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. – NIA குற்றப்பத்திரிக்கை.
புல்வாமா பயங்கர தாக்குதல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு துறையான NIA செவ்வாய்க்கிழமையன்று 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இதில் 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் புல்வாமா எனும் இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பு நிகழ்த்தியது.
இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான NIA விசாரித்தது. அதன்படி 13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை செவ்வாய்க்கிழமை அன்று தாக்கல் செய்யபட்டது. அதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மருமகன் முகமது உமர் பருக் என்பவருக்கு தாக்குதலை நடத்துவதற்கு 10 லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளது. இந்த பத்து லட்சம் ரூபாய் பரிவர்த்தனையானது, பாகிஸ்தானில் உள்ள வங்கி கணக்குகள் மூலம் நடைபெற்றுள்ளது என NIA குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பரிமாற்றம் ஆனது 2019 ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்த வெடிபொருள்கள் மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் வாங்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த 13,500 பக்க குற்றப்பத்திரிகையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…