புல்வாமா தாக்குதல்.! பாகிஸ்தான் வங்கியில் இருந்து 10 லட்சம் பரிமாற்றம்.! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.!

Default Image

புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மருமகன் முகமது உமர் பருக்கிற்கு தாக்குதலை நடத்துவதற்கு 10 லட்சம் ரூபாயானது பாகிஸ்தானில் உள்ள வங்கி கணக்குகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. – NIA குற்றப்பத்திரிக்கை.

புல்வாமா பயங்கர தாக்குதல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு துறையான NIA செவ்வாய்க்கிழமையன்று 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இதில் 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் புல்வாமா எனும் இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பு நிகழ்த்தியது.

இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான NIA விசாரித்தது. அதன்படி 13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை செவ்வாய்க்கிழமை அன்று தாக்கல் செய்யபட்டது. அதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மருமகன் முகமது உமர் பருக் என்பவருக்கு தாக்குதலை நடத்துவதற்கு 10 லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளது. இந்த பத்து லட்சம் ரூபாய் பரிவர்த்தனையானது, பாகிஸ்தானில் உள்ள வங்கி கணக்குகள் மூலம் நடைபெற்றுள்ளது என NIA குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பரிமாற்றம் ஆனது 2019 ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்த வெடிபொருள்கள் மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் வாங்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த 13,500 பக்க குற்றப்பத்திரிகையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்