கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஸ்வப்னாவை 10 நாள்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தபோது அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கும், சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
மேலும், இந்த தங்கக் கடத்தல் தொடர்பாக 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவான ஸ்வப்னா பெங்களூரில் இருப்பதாக என்ஐஏவிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள் அவரையும், சந்தீப் நாயரை கைது கைது நேற்று பிற்பகல் கேரளாவிற்கு கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர். பின்னர், நீதிமன்றம் ஸ்வப்னாவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிடப்பட்டது.
கர்நாடகாவில் இருந்து கேரளா வந்ததால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால் திருச்சூரில் உள்ள கொரோனா நல மையத்தில் அவர்களை போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டனர்.
பரிசோதனை முடிவுகள் வந்ததும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. சோதனை முடிவில் நெகட்டிவ் என தெரிய வந்ததால் அவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஸ்வப்னாவை 10 நாள்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…