இஸ்லாமிய மத பிரசாரகர், ஜாகிர் நாயக்கின், ‘பீஸ் டிவி’ செயலி மற்றும் அவரது, ‘யூ டியூப்’ சேனலுக்கு இந்தியாவில் தடை விதிப்பது தொடர்பாக, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக், தன் ‘பீஸ் டிவி’ மூலம், மத வெறுப்புணர்வை துாண்டும் செயலில் ஈடுபட்டு வந்ததால், இரு ஆண்டுகளுக்கு முன், அந்த, ‘டிவி’ ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ‘பீஸ் ஆப்’ என்ற மொபைல் போன் செயலி மூலம், மத வெறுப்புணர்வையும், இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களையும், ஜாகிர் நாயக் மேற்கொண்டு வருவதை, புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து, தாய் நாட்டிற்கு எதிராக திருப்பி விடும் நடவடிக்கையில், ஜாகிர் நாயக் ஈடுபட்டு வருவதாக, புலனாய்வு துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. எனவே இந்த சேனல் மற்றும் செயலிக்கு தடை விதிக்க இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதேபோல், ஜாகிர் நாயக் மற்றும் அவரது நிறுவனங்களுக்கு, ஜிகாதி குழுக்களுடன் உள்ள தொடர்பும், இந்தியாவிற்கு எதிரான பிரசாரத்திற்கு ஆட்களை நியமிக்க, அரபு நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருவது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, என்.ஐ.ஏ அமைப்பு, ‘ஜாகிர் நாயக்கின் பீஸ் செயலி, யூ டியூப் வீடியோ ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்’ என, அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…