தமிழகம் உட்பட நாடு முழுவதும் என்ஐஏ தீவிர சோதனை.! முக்கிய அதிகாரிகளுடன் அமித்ஷா தீவிர ஆலசோனை.!
இந்தியா முழுவதும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் உள்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகம், கேரளா உட்பட இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகங்கள், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தமிழத்தில், கோவை, தேனி, ராமநாதபுரம், தென்காசி என பல இடங்களில் சோதனை நடைபெற்று பல்வேறு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும், எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா முக்கிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கை நேற்று இரவு முதல் தொடங்கி இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் உள்துறை அலுவலகத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை செயல்துறை அதிகாரிகள், என்.ஐ.ஏ அதிகாரிகள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார்.