10 மாநிலங்களில் சோதனை.. 44 பேர் கைது.! என்ஐஏ அதிரடி.!
அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் அந்நாட்டு சேர்ந்தவர்கள் ஊடுருவுவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ (NIA) நேற்று பல்வேறு மாநிலங்களில் சோதனைகளை மேற்கொண்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சோதனை செய்து இரண்டு பேரை கைது செய்தது.
இந்த சோதனை தொடர்பாக தற்போது என்ஐஏ விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் குறிப்பிட்ட செய்து குறிப்பில், இந்தியா – வங்கதேச எல்லை வழியாக வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி வடமாநிலத்தவர்களைப் போல் அடையாளம் காண்பிக்கப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள்.
டெல்லியில் மற்ற மாநில டாக்சிகள் நுழைவதற்கு தடை..!
இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் திரிபுரா, அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தெலுங்கானா, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கலில் குறிப்பாக சென்னை, பெங்களூர், ஜெய்பூர், கௌஹாத்தி ஆகிய நகரங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பத்து மாநிலங்களில் மொத்தம் 55 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. இதில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 21 பேர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 10 பேர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 3 பேர் தமிழகத்தில் 2 பேர், புதுச்சேரி, தெலுங்கானா, ஹரியானாவில் தலா ஒருவர் என மொத்தமாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மின்னணு சாதனங்கள், செல்போன், சிம் கார்டு, 20 லட்சம் ரூபாய் ரொக்கம், வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று என்ஐஏ (NIA) தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.