2024க்குள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் NIA கிளை – அமித்ஷா அறிவிப்பு
2024க்குள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு ( NIA ) கிளைகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
ஹரியானாவில் இன்று தொடங்கிய ‘சிந்தன் ஷிவிர்’ கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.2 நாட்கள் நடக்கும் இம்முகாமில் அமித்ஷா தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
ஒன்பது மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்கள் அல்லது அனைத்து மாநிலங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் கலந்து கொள்கின்றனர்.நாளை காணொளி வாயிலாக பிரதமர் மோடியும் இம்முகாமில் உரையாற்றயுள்ளார்.
முகாமில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ” எல்லைத் தாண்டிய குற்றங்களைத் திறம்பட கையாள்வது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பு ” என்றும் “வலுவான பயங்கரவாத எதிர்ப்பு வலையமைப்பை உருவாக்குவதற்கான “முக்கிய மாற்றங்களின்” ஒரு பகுதியாக,2024 க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் NIA கிளைகள் அமைக்கப்படும்” எனவும் தெரிவித்தார் .
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய ஏராளமான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன.”மிகக் குறுகிய காலத்தில், பாராளுமன்றத்தில் CrPC மற்றும் IPC இன் புதிய வரைவை நாங்கள் கொண்டு வருவோம்,” என்று மேலும் அவர் கூறினார்.