தேசிய நீர் மின்சக்தி கழகத்தில்(NHPC) 173 காலிப்பணியிடங்கள்..!
தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் 173 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் (NHPC) 173 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சீனியர் மெடிக்கல் ஆபீசர், அசிஸ்டன்ட் ராஜ்பாஷா ஆபீசர், ஜூனியர் என்ஜினீயர் மற்றும் சீனியர் அக்கவுண்டண்ட் பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/ நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ/ MBBS/ CA/ CMA/ முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
எஸ்எம்ஓ: 33 ஆண்டுகள்.
ஏஆர்ஓ: 35 ஆண்டுகள்.
மற்ற பதவிகள்: 30 ஆண்டுகள்.
ஊதியம்
ரூ. 40,000/- முதல் ரூ.1,80,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை
- ஆன்லைன் முறையில் விண்ணப்பம் ஏற்கப்படும்.
- அதிகாரப்பூர்வ வலைத்தளமான nhpcindia.com க்குச் செல்லவும்.
- கேரியர்ஸ் மீது கிளிக் செய்யவும், அதில் சீனியர் மெடிக்கல் ஆபிசர், ராஜ்பாஷா அதிகாரி, JE (சிவில், எலக்ட்ரிக்கல் & மெக்கானிக்கல்) மற்றும் NHPC லிமிடெட்டில் சீனியர் கணக்காளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு இடத்தில் கிளிக் செய்யவும்.
- பின்னர் அறிவிப்பு திறக்கப்படும், அதைப் படித்து தகுதியைச் சரிபார்க்கவும்.
- தேவையான ஆவணத்தை பதிவேற்றவும்.
- பின்னர் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும் அதனை அடுத்து இதை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.