உத்தரகண்ட் சுரங்க விபத்து : இன்று மாலை நல்ல செய்தி வரும்.! மீட்புக்குழு தகவல்.! 

Uttarakhand Uttarkashi Silkyara mine accident

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தன. அப்போது தொழிலாளர்கள் வேலை பார்த்து இருந்த சமயத்தில் மண்சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்து சுரங்கப்பாதை மூடியது.

இந்த விபத்து கடந்த நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்க மீட்புப்படையினர் தெடர்ந்து முயற்சி செய்துவருகிண்டனர். 11வது நாளாக இன்றுவரை (புதன்கிழமை) மீட்பு பணிகள் தொடர்கிறது.

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்.! வெளியான முதல் வீடியோ.! 

ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கப்பாதை இடையே பாறைகள் அதிகம் இருந்ததால், மீட்பு பணிகள் நடைபெறுவதில் சிரமம் இருந்தது. அதானல் நேற்று இரவு 12 மணி அளவில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதிக்கு செங்குத்தாக சுரங்கப்பாதை தோண்டப்பட்டது.

மொத்தமுள்ள 59 மீட்ட்ரில் 39 மீட்டர் வரையில் தோண்டப்பட்டு விட்டது. இந்த வேகத்தில் எல்லாம் சரியாக நடந்தால், இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் 41 தொழிலாளர்களையும் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டனர் என நல்ல செய்திகள் கிடைக்கும் என தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHIDCL) இயக்குனர் மஹ்மூத் அகமது கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi