ஆக்சிஸ், ஐசிஐசிஐ உள்ளிட்ட 6 வங்கிகளுடன் கைகோர்த்த- NHAI..!
இந்திய ரிசர்வ் வங்கி Paytm Payments Bank (PPBL) மீதான பரிவர்த்தனை தடையை பிப்ரவரி 29 முதல் மார்ச் 15 வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. அதாவது மார்ச் 15 வரை மட்டுமே Paytm Payments Bank வாடிக்கையாளர்களின் கணக்கில் டெபாசிட், டாப்-அப் மற்றும் கிரெடிட் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் அதற்கு மேல் மேற்கொள்ள முடியாது. சில முறைகேடுகள் காரணமாக Paytm Payments Bank மீது ரிசர்வ் வங்கி இந்தத் தடையை கடந்த ஜனவரி 31 அன்று விதித்தது.
இதற்கிடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஃபாஸ்ட் டேக் சேவைக்கான அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலில் இருந்து Paytm Payments Bank பெயரை நீக்கியது. சில முறைகேடுகள் காரணமாக Paytm Payments வங்கியை நீக்க முடிவு செய்துள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவதற்கு வசதியாக ஆக்சிஸ் (Axis), ஹெச்டிஎஃப்சி (HDFC), ஐசிஐசிஐ (ICICI) வங்கி, ஐடிபிஐ வங்கி (IDBI Bank), ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC FIRST Bank ), கோடக் மஹிந்திரா வங்கி(Kotak Mahindra Bank) ஆகிய 6 வங்கிகளுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAI கைகோர்த்துள்ளள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
PAYTM செயல்பாடுகளை நிறுத்த காலக்கெடு நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
NHAI ஆல் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் இப்போது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, அலகாபாத் வங்கி, AU சிறு நிதி வங்கி, ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, சிட்டி யூனியன் வங்கி, காஸ்மோஸ் வங்கி, ஈக்விடாஸ் ஸ்மால் நிதி வங்கி, பெடரல் வங்கி.
ஃபினோ பேமென்ட்ஸ் வங்கி, HDFC வங்கி, ICICI வங்கி, IDBI வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி, இந்தியன் வங்கி, Induslnd வங்கி, ஜே&கே வங்கி, கர்நாடகா வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, நாக்பூர் நகரிக் சககாரி வங்கி, பஞ்சாப் ஆகியவை பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற வங்கிகள். நேஷனல் வங்கி, சரஸ்வத் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, திருச்சூர் மாவட்ட கூட்டுறவு வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யெஸ் வங்கி போன்ற வங்கிகள் உள்ளன.
247 சுங்கச்சாவடிகளில், 56 பல்வேறு மாநில ஏஜென்சிகளாலும், 122 NHAI மற்றும் 65 தனியார் ஒப்பந்தக்காரர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. 2023 நிதியாண்டில் மொத்த டோல் வசூல் ரூ.48,028 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ.53,000 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.