காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை – தேசிய பசுமை தீர்ப்பாயம்
காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 14-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு சில மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காற்றுமாசு அதிகமுள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பட்டாசுகள் வெடிக்கத் தடை கோரி பல்வேறு தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.மனுக்கள் மீது பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது ,டெல்லி மற்றும் நாடு முழுவதும் கடந்த ஆண்டு தரவுகளின் படி காற்று தரக் குறியீடு மோசமாக இருந்த பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும் ,விற்பனை செய்யவும் இன்று நள்ளிரவு (நவம்பர் 9-ஆம் தேதி ) முதல் நவம்பர் 30 -ஆம் தேதி நள்ளிரவு வரை தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காற்றின் தரம் மிதமானதாக உள்ள நகரங்களிலும் , அதற்குக் கீழாகவும்இருக்கும் நிலையில் , பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.