அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் மாநில முதல்வராக கட்சி யாரை அறிவிக்கிறார்களோ அவர்களை முதல்வராக ஏற்றுக்கொள்வோம் என ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர்.
இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு விட்டார். கட்சி விதிகளின்படி அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அப்படி செய்தால் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அதன் படி காங்கிரஸ் கட்சி சார்பில் அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி ராஜஸ்தான் மாநில அரசியல் வட்டாரத்தில் விசாரிக்கையில் ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் டாக்டர் சி.பி.ஜோஷியை தேர்ந்தெடுக்க, அவர் பெயரை அசோக் கெலாட் பரிந்துரை செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அதில் ஒரு சிறிய சிக்கலாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஜூலை 2020இல் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக, தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் உடன் இருக்கும் சச்சின் பைலட், தனக்கான ஆதரவையும் ராஜஸ்தான் அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டனியில் இருக்கும் பகுஜான் கட்சியின் 6 எம்.எல்.ஏக்களில் சிலரும் சச்சின் பைலட் பக்கம் சாய வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
ஆனால், ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தலைமை யாரை முதல்வராக தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களுக்கு எங்கள் முழு ஆதரவை தருவோம் என கூறியுள்ளனர்.
சென்னை: கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமும் உள்ளது என்று சென்னை ஐஐடி…
சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை'…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…