பெங்களுருவில் அடுத்த எதிர்க்கட்சி கூட்டம்.. இந்த தேதிகள் தான் – சரத்பவார் அறிவிப்பு
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற இருந்த நிலையில், பெங்களூருக்கு மாற்றம்.
பெங்களுருவில் அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களுருவில் ஜூலை 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிம்லாவுக்கு பதில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்து பிரதமர் மோடி கலக்கம் அடைத்திருப்பதாகவும் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஜூன் 23-ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலுவான எதிரணியை கட்டமைப்பது குறித்து பாட்னா கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது