NEWYEAR2021: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து.!

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு 2021 புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை வண்ணவிளக்குகள், வாண வேடிக்கைகளுடன் மக்கள் உற்சகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். புது வருட பிறப்பை பலரும் இந்த வருடம் இனிய வருடமாக இருக்கட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தும், மலர்க்கொத்து வழங்கியும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். 2021-ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும் என்று உற்சாகமுடன் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Wishing you a happy 2021!
May this year bring good health, joy and prosperity.
May the spirit of hope and wellness prevail.
— Narendra Modi (@narendramodi) January 1, 2021
இதையடுத்து, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பையும் தனிப்பட்ட மற்றும் கூட்டு வளர்ச்சிக்கான தீர்வையும் புத்தாண்டு வழங்குகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சவால்கள், ஒற்றுமையாக முன்னேறிச்செல்ல வேண்டியதன் உறுதியை வலுப்படுத்தியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
Happy New Year everyone!
New Year provides an opportunity to make a fresh beginning and resolve for individual and collective development.
Challenges arising out of COVID-19 situation strengthen our determination to move forward unitedly.
— President of India (@rashtrapatibhvn) January 1, 2021
இதனிடையே, காங்கிரஸ் எ.ம் ராகுல் காந்தி 2021 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புதிய ஆண்டு துவங்கும்போது, நாம் இழந்தவர்களை நினைவில் வைத்துக் கொள்கிறோம். எங்களுக்காக பாதுகாத்து தியாகம் செய்த அனைவருக்கும் நன்றி. அநியாய சக்திகளை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் போராடும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் என் இதயம் இருக்கிறது. அனைவர்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று பகிர்ந்துள்ளார்.
As the new year begins, we remember those who we lost and thank all those who protect and sacrifice for us.
My heart is with the farmers and labourers fighting unjust forces with dignity and honour.
Happy new year to all. pic.twitter.com/L0esBsMeqW
— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025