அண்டை மாநிலங்களான தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டு ; யுகாதி பண்டிகை!
தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தான் உகாதி அல்லது யுகாதி என கூறப்படுகிறது.யுகாதி என்றால் யுகத்தின் ஆதி ஆரம்பம் என்று பொருள்.
மகாராஷ்டிராவை சேர்ந்த மக்களும் இதே நாளை குடிபாட்வா எனவும்,அதேபோல் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர்.
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. யுகாதி தினம் புதிய வேலை, கல்வி, தொழில் போன்றவற்றைத் துவக்குவது சிறந்தது.
யுகாதி பச்சடி:
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் விதமாக யுகாதி பச்சடி செய்து ஹிந்து மத சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள் – வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி தான் இது.