Categories: இந்தியா

நியூஸ்க்ளிக் நிறுவனருக்கு 10 நாள் நீதிமன்ற காவல் ..!

Published by
murugan

டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், நியூஸ் கிளிக் நிறுவனர் புர்கயாஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி வழங்கியது.

நியூஸ் கிளிக் மற்றும் அதன் பத்திரிகையாளர்களுடன் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து  நியூஸ் கிளிக் நிறுவனர் புர்கயாஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பல பத்திரிகையாளர்களை டெல்லியில் போலீசார் விசாரித்தனர்.  பின்னர் டெல்லியில்  உள்ள ‘நியூஸ்க்ளிக்’ அலுவலகத்துக்கு போலீசார்  சீல் வைத்தனர்.

46 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் இருவருரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை ஏழு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ‘நியூஸ்க்ளிக்’ நிறுவனர் நியூஸ் கிளிக் நிறுவனர் புர்கயாஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரின்  7 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் போலீஸ் காவலில் இருந்த இருவரையும் டெல்லி போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இருவரும் மதியம் 2:50 மணியளவில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இருவரையும் 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அரசுத் தரப்பு கோரிக்கை வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், நியூஸ் கிளிக் நிறுவனர் புர்கயாஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி வழங்கியது.  ‘நியூஸ்க்ளிக்’ நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிடவே பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

அண்ணா பல்கலை. விவகாரம் – அதிமுக கேவியட் மனு தாக்கல்!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…

43 minutes ago

பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய விடாமுயற்சி! ரெட் ஜெயண்ட் போட்ட சூப்பர் பிளான்?

சென்னை :  அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…

1 hour ago

வெளியானது ‘7/G ரெயின்போ காலனி 2’ அப்டேட்.! புத்தாண்டில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்.!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…

2 hours ago

‘கேம் சேஞ்சர்’ படத்தின் டிரெய்லர் எப்போது? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…

2 hours ago

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை :  பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…

3 hours ago

தமிழகத்தில் வியாழக்கிழமை (02/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

உடுமல்பேட்டை :   பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…

4 hours ago